வௌ்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் பயணித்த பஸ் விபத்து; சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழப்பு

வௌ்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் பயணித்த பஸ் விபத்து; சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Dec, 2021 | 2:52 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மதவாச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் இக்கிரிகொல்லாவ பகுதியில் வௌ்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியாருக்கு சொந்தமான சொகுசு பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.

நேற்று (10) அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 08 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தனர்.

அவர்களில் கிளிநொச்சி, அனியங்குளம் பகுதியை சேர்ந்த 26 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பஸ் சாரதியின் கவனயீனமே விபத்திற்கான காரணமென பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்