மும்பையில் 144 தடையுத்தரவு அமுல்

மும்பையில் 144 தடையுத்தரவு அமுல்

மும்பையில் 144 தடையுத்தரவு அமுல்

எழுத்தாளர் Bella Dalima

11 Dec, 2021 | 4:04 pm

Colombo (News 1st) மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் 02 நாட்களுக்கு 144 தடையுத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் Omicron பிறழ்வினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வார இறுதியான இன்றும் (11) நாளையும் 144 தடையுத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் பிரகாரம், பேரணிகளை நடத்துதல், ஒன்றுகூடுதல், கூட்டமாக சேர்ந்து செல்தல், வாகனங்களில் கூட்டமாக பயணித்தல் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை மீறுவோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் மாத்திரம் 7 பேர் Omicron பிறழ்வுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒன்றரை வயது குழந்தையும் 3 ஆண்களும் அடங்குகின்றனர்.

இந்தியாவில் Omicron தொற்றுக்குள்ளானோரின் எணணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்