முகமாலையில் வெடிபொருட்களும் மனித எச்சங்களும் கண்டுபிடிப்பு

முகமாலையில் வெடிபொருட்களும் மனித எச்சங்களும் கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Dec, 2021 | 2:32 pm

Colombo (News 1st) கிளிநொச்சி – முகமாலையில் வெடிபொருட்களும் மனித எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இன்று (11) முற்பகல் இவை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போதே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நீதிமன்ற அனுமதியை பெற்று அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் கூறினர்.

மனித எச்சங்கள், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சீருடை, வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்