பிரியந்த குமார கொலை: ஆடைத்தொழிற்சாலையில் விசேட குழு சோதனை

பிரியந்த குமார கொலை: ஆடைத்தொழிற்சாலையில் விசேட குழு சோதனை

பிரியந்த குமார கொலை: ஆடைத்தொழிற்சாலையில் விசேட குழு சோதனை

எழுத்தாளர் Staff Writer

11 Dec, 2021 | 10:19 pm

Colombo (News 1st) பாகிஸ்தானின் சியால்கோட் நகரில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தொடர்பான வழக்கை தினமும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள பஞ்சாப் மாகாண அரசு தீர்மானித்துள்ளது.

நீதியமைச்சர் முகமத் பஷாரத் ராஜாவின் தலைமையில் சட்டம் மற்றும் ஒழுங்கிற்கான மாகாண அமைச்சரவை கூடியபோது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரியந்த குமாரவின் கொலை தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக விசேட வழக்கு தாக்கல் செய்வதற்கான குழு சியால்கோட் நகருக்கு சென்றுள்ளது.

சியால்கோட்டில் உள்ள பிரியந்த குமார பணிபுரிந்த ராஜ்கோ ஆடைத்தொழிற்சாலையில் இந்த விசேட குழு
சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளது

100-க்கும் மேற்பட்ட CCTV கெமராக்களில் இருந்து பெறப்பட்ட 12 மணித்தியால காட்சிகள் இந்த விசேட குழுவின் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

பிரியந்த குமாரவின் கொலை தொடர்பில் 139 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களில் 34 பேர் பிரதான சந்தேகநபர்களாவர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்