படகுப்பாலம் விபத்து: கிண்ணியா நகரசபை தலைவர் பிணையில் விடுவிப்பு

படகுப்பாலம் விபத்து: கிண்ணியா நகரசபை தலைவர் பிணையில் விடுவிப்பு

படகுப்பாலம் விபத்து: கிண்ணியா நகரசபை தலைவர் பிணையில் விடுவிப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Dec, 2021 | 3:24 pm

Colombo (News 1st) கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் படகுப்பாலம் கவிழ்ந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கிண்ணியா நகரசபை தலைவர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் கிண்ணியா நகர சபை தலைவர் S.H.M.நளீம் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறிஞ்சாக்கேணி படகு விபத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 24 ஆம் திகதி நால்வர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, கிண்ணியா நகர சபை தலைவர் பிணையில் விடுக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏனைய மூவருக்கும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்