நாட்டில் இனி மின் விநியோகம் துண்டிக்கப்பட மாட்டாது: மின்சக்தி அமைச்சு

நாட்டில் இனி மின் விநியோகம் துண்டிக்கப்பட மாட்டாது: மின்சக்தி அமைச்சு

நாட்டில் இனி மின் விநியோகம் துண்டிக்கப்பட மாட்டாது: மின்சக்தி அமைச்சு

எழுத்தாளர் Staff Writer

10 Dec, 2021 | 2:09 pm

Colombo (News 1st) நாட்டின் எந்தவொரு பகுதியிலும் இன்று (10) முதல் மின் விநியோகம் துண்டிக்கப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றிரவு முதல் மின் துண்டிப்பை மேற்கொள்வதை நிறுத்துவதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

தேவையான மின் விநியோகத்தை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கடந்த சில நாட்களாக மாலை 06 மணி தொடக்கம் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது.

கடந்த வாரம் நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகத்திற்கு தடை ஏற்பட்ட போது, நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்கிகள் செயலிழந்தமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்