சுவிட்சர்லாந்து தூதுவர் - கூட்டமைப்பினர் சந்திப்பு

சுவிட்சர்லாந்து தூதுவருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு

by Staff Writer 10-12-2021 | 6:04 PM
Colombo (News 1st) இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர். சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் Dominik Furgler, அரசியற்துறை செயலாளர் Sidonia Gabriel ஆகியோரை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று சந்தித்துள்ளனர். கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் இந்த சந்திப்பு இன்று (10) காலை இடம்பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், வினோ நோகராதலிங்கம் மற்றும் TELO-வின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். இதன்போது, தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைகள், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது.