பளுதூக்கல் போட்டிகளில் இலங்கைக்கு தங்கப் பதக்கம் 

2021 பொதுநலவாய பளுதூக்கல் போட்டிகளில் இலங்கைக்கு தங்கப் பதக்கம் 

by Staff Writer 09-12-2021 | 6:34 PM
Colombo (News 1st) 2021 பொதுநலவாய பளுதூக்கல் போட்டிகளில் மகளிருக்கான 45 கிலோ எடை பிரிவில் ஶ்ரீமாலி சமரகோன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். உலக சாம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடருக்கு இணையாக பொதுநலவாய பளுதூக்கல் போட்டிகள் உஸ்பெகிஸ்தானில் நடைபெறுகின்றன. 58 கிலோகிராம் Snatch பிரிவிலும் clean and jerk பிரிவில் 78 கிலோகிராமை தூக்கியும் திறமையை வௌிப்படுத்தினார். அதற்கமைய, அடுத்த வருடம் பிரித்தானியா - பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்கும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளார்.