தலைகீழாக கவிழ்ந்த கார் ; சாரதி காயம்

by Staff Writer 09-12-2021 | 10:55 AM
Colombo (News 1st) கதிர்காமம் - கொழும்பு பிரதான வீதியின் ஹம்பாந்தோட்டை - கட்டுவ பிரதேசத்தில் இன்று (09) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். அம்பலாந்தோட்டையிலிருந்து ஹம்பாந்தோட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் மோட்டார் வாகனத்தின் சாரதி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்துக்குள்ளான மோட்டார் வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்