இயக்குனர் M. தியாகராஜன் காலமானார்

இயக்குனர் M. தியாகராஜன் காலமானார்

by Chandrasekaram Chandravadani 09-12-2021 | 9:21 AM
Colombo (News 1st) திரைப்பட இயக்குனர் M. தியாகராஜன் நேற்று (08) காலமானார். நடிகர் பிரபு நடித்த 'வெற்றி மேல் வெற்றி' மற்றும் கெப்டன் விஜயகாந்த நடித்த 'மாநகர காவல்' உள்ளிட்ட பல திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார். வடபழனியில் அமைந்துள்ள AVM ஸ்டூடியோவின் அருகாமையில் உயிரிழந்த நிலையில் அன்னாரின் உடல் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அன்னாரின் மறைவுக்கு திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.