யாழ்ப்பாணத்தில் சுவரில் இருந்து கீழே வீழ்ந்து சிறுவன் பலி

யாழ்ப்பாணத்தில் சுவரில் இருந்து கீழே வீழ்ந்து சிறுவன் பலி

எழுத்தாளர் Bella Dalima

09 Dec, 2021 | 6:41 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, தொல்புரத்தில் கட்டிடத்தின் சுவர் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வரும் கட்டிடத்தின் பூர்த்தி செய்யப்படாத சுவரின் மீதேறி தனது சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், 11 வயது சிறுவன் தவறி வீழ்ந்து காயமடைந்தார்.

மூளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, ​மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்