போதைப்பொருளுடன் கைதான இருவர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் வௌிக்கொணர்வு

போதைப்பொருளுடன் கைதான இருவர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் வௌிக்கொணர்வு

போதைப்பொருளுடன் கைதான இருவர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் வௌிக்கொணர்வு

எழுத்தாளர் Staff Writer

09 Dec, 2021 | 2:07 pm

Colombo (News 1st) அக்கரைப்பற்றில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கொள்ளைச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இருவரிடம் ​மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பெறப்பட்ட தகவல்களுக்கமைய அம்பாறை, மட்டக்களப்பு, கல்முனை, அக்கரைப்பற்று, திருகோணமலை, மத்திய மலைநாடு, சவளக்கடை, கரடியனாறு மற்றும் காத்தான்குடி உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளில் தங்காபரணங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் கொள்ளையடித்த தங்காபரணங்களை விற்றுள்ளதுடன், அடகு வைத்து 37 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றுள்ளனர்.

அத்துடன் 37 பவுன் பெறுமதியான தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், சந்தேகநபர்கள் தங்காபரணங்களை அடகுவைத்துள்ள நிறுவனங்கள் தொடர்பிலான தகவல்களைப் பெறுவதற்காக நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வேறு ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது தொடர்பிலான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

03 கிராம் 220 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இறக்காமத்தை சேர்ந்த சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்ற அனுமதியின் பின்னர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்