கம்பளையிலும் மட்டக்களப்பிலும் எரிவாயு அடுப்பு தீப்பற்றிய சம்பவங்கள் பதிவு

கம்பளையிலும் மட்டக்களப்பிலும் எரிவாயு அடுப்பு தீப்பற்றிய சம்பவங்கள் பதிவு

எழுத்தாளர் Staff Writer

09 Dec, 2021 | 4:04 pm

Colombo (News 1st) கம்பளை – வெலம்பொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்பிட்டிய பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (08) பகல் எரிவாயு அடுப்பு தீப்பற்றியுள்ளது.

எரிவாயுவுடன் தொடர்புடைய தீப்பற்றல் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருவதால், அச்சத்தில் வீட்டிற்கு வௌியே அடுப்பை வைத்தே இவர்கள் சமைத்து வந்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

இந்த நிலையில், அடுப்பு அணைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் திடீரென தீ பரவியுள்ளது.

மட்டக்களப்பு – சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிவேம்பு சம்பந்தர் வீதியிலுள்ள வீடொன்றிலும் நேற்று (08) பகல் எரிவாயு அடுப்பு தீப்பற்றியுள்ளது.

வீட்டிலிருந்தவர்கள் சமைத்துக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.

வெடிப்புச் சத்தம் கேட்டதை அடுத்து அடுப்பிலிருந்து எரிவாயு சிலிண்டரை வீட்டின் உரிமையாளர் அகற்றியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்