கண்டி வொரியர்ஸை தோற்கடித்த ஜஃப்னா கிங்ஸ் அணி

கண்டி வொரியர்ஸை தோற்கடித்த ஜஃப்னா கிங்ஸ் அணி

கண்டி வொரியர்ஸை தோற்கடித்த ஜஃப்னா கிங்ஸ் அணி

எழுத்தாளர் Staff Writer

09 Dec, 2021 | 11:28 am

Colombo (News 1st) லங்கா பீரீமியர் லீக் 20 க்கு 20 கிரிக்கெட் தொடரில் கண்டி வொரியர்ஸூக்கு (Kandy Warriors) எதிரான போட்டியில் ஜஃப்னா கிங்ஸ் (Jaffna Kings) வெற்றியீட்டியுள்ளது.

தொடரில் ஜஃப்னா கிங்ஸ் அணி பெற்றுள்ள இரண்டாவது வெற்றி இதுவாகும்.

கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டி, மழை காரணமாக 14 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஜஃப்னா கிங்ஸ் அணி 32 ஓட்டங்களில் முதலிரண்டு விக்கெட்களையும் இழந்தது.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ 23 பந்துகளில் 7 சிக்ஸர்களை விளாசியதுடன், 53 ஓட்டங்களைப் பெற்றார்.

அணித்தலைவர் திசர பெரேரா, 06 சிக்ஸர்களை இரண்டு பவுன்டரிகள் உள்ளடங்கலாக 53 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

சத்துரங்க டி சில்வா 21 ஓட்டங்களையும் ஷொஹீப் மலீக் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் 22 ஓட்டங்களைக் கொடுக்க ஷிராஸ் அஹமட் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய ஜஃப்னா கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 14 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்களைப் பெற்றது.

டக்வோர்த் லூயிஸ் முறைப்படி 181 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய கண்டி வொரியர்ஸ் அணியின் முதலாவது விக்கெட்டிற்காக Kennar Lewis மற்றும் சரித் அசலங்க ஜோடி 64 ஓட்டங்களைப் பகிர்ந்தது.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய Rovman Powell 7 சிக்ஸர்கள் 2 பவுன்டரிகளுடன் 19 பந்துகளில் 61 ஓட்டங்களை விளாசினார்.

எனினும், நிர்ணயிக்கப்பட்ட 14 ஓவர்களில் கண்டி வொரியர்ஸினால் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

டக்வர்த் லூயிஸ் முறைப்படி ஜஃப்னா கிங்ஸ் அணி 14 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்