ஒலிம்பிக் போட்டிகளை பகிஷ்கரிக்கும் நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை

ஒலிம்பிக் போட்டிகளை பகிஷ்கரிக்கும் நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை

ஒலிம்பிக் போட்டிகளை பகிஷ்கரிக்கும் நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

09 Dec, 2021 | 6:26 pm

Colombo (News 1st) 2022 ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை பகிஷ்கரிப்பதாக அறிவித்த நாடுகள் அதற்கான விலையை செலுத்த வேண்டுமென சீனா எச்சரித்துள்ளது.

சீனாவின் மனித உரிமை மீறல் செயற்பாடுகள் காரணமாக, ஒலிம்பிக் போட்டிகளுக்கு அரசாங்க பிரதிநிதிகளை அனுப்புவதில்லையென அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

இந்த நாடுகளால் குறிப்பிடப்படும் மனித உரிமை மீறல்களில், உலகளாவிய ரீதியில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான Uyghur சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்களும் உள்ளடங்குகின்றன.

இருப்பினும், இந்த பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் இணைந்துகொள்ளப்போவதில்லையென, அடுத்த கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவுள்ள பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பீஜிங்கில் நடைபெறவுள்ளன.

அரசியல் ரீதியில் அனைவரையும் திசைதிருப்புவதற்கான தளமாக ஒலிம்பிக் போட்டிகளை குறித்த நான்கு நாடுகளும் பயன்படுத்துவதாக சீன வௌிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் (Wang Wenbin) குற்றஞ்சுமத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்