இன்று (09) முதல் இலவச Antigen பரிசோதனை

இன்று (09) முதல் இலவச Antigen பரிசோதனை

எழுத்தாளர் Staff Writer

09 Dec, 2021 | 1:37 pm

Colombo (News 1st) இன்று (09) முதல் மக்களுக்கு இலவசமாக அன்டிஜன் (Antigen) பரிசோதனையை முன்னெடுக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதனடிப்படையில், கொழும்பு கெம்பல் மைதானத்தில் மாத்திரமே இலவசமாக அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.

நேற்று (08) 44,838 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசியாக பைஸர் (Pfizer) தடுப்பூசி ஏற்றப்பட்டதன் அடிப்படையில் நாட்டின் தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டின் கீழ் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைக் கடந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்