by Bella Dalima 08-12-2021 | 6:33 PM
Colombo (News 1st) ஜெர்மனியின் புதிய அதிபராக ஒலாப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) பதவியேற்றுள்ளார்.
ஜெர்மன் பாராளுமன்றத்தில் நடைபெற்ற அதிபருக்கான வாக்கெடுப்பில் இவருக்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தன.
இதனையடுத்து, அங்கெலா மேர்க்கலின் 16 வருட அதிபர் பதவி நிறைவுக்கு வந்துள்ளது. மேலும், அவரது 31 வருட அரசியல் வாழ்க்கையும் முடிவடைகின்றது.
பசுமைக்கட்சி மற்றும் சுதந்திர ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் கூட்டணியுடன், ஒலாப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) இன் இடதுசாரிக் கொள்கையுடைய சமூக ஜனநாயகக் கட்சி ஆட்சியமைக்கவுள்ளது.
கடந்த செப்டம்பரில் நடைபெற்ற தேர்தலில், சமூக ஜனநாயகக் கட்சிக்கு தலைமைத்துவம் வழங்கிய 63 வயதான ஒலாப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) அதற்கு வெற்றியையும் பெற்றுக்கொடுத்திருந்தார்.
எந்தவொரு கட்சிக்கும் ஆட்சியமைப்பதற்கான முழுமையான பெரும்பான்மை கிடைக்காமையால், கூட்டணியமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
அதிபர் அங்கெலா மேர்க்கலின் அரசாங்கத்தில் இவர் பிரதி அதிபராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.