ரயிலுடன் மோதுண்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு

by Staff Writer 08-12-2021 | 1:43 PM
Colombo (News 1st) ரொசெல்ல ரயில் நிலையத்திற்கு அருகாமையில், ரயிலுடன் மோதுண்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். பதுளையிலிருந்து கொழும்பு - கோட்டை நோக்கி பயணித்த ரயிலிலேயே குறித்த மூவரும்  மோதுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களில் 41 வயதான மகனின் அடையாள அட்டை கிடைத்துள்ளதாகவும் அவர் மஸ்கெலியா - சாமிமலை பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் கூறினர். தாயும் தந்தையும் சுமார் 60 வயது மதிக்கத்தக்கவர்கள் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். வட்டவளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.