பசுமை விவசாயம் தொடர்பில் இராணுவத் தளபதி தலைமையில் கலந்துரையாடல்

பசுமை விவசாயம் தொடர்பில் இராணுவத் தளபதி தலைமையில் கலந்துரையாடல்

எழுத்தாளர் Staff Writer

08 Dec, 2021 | 8:35 pm

Colombo (News 1st) பசுமை விவசாயத்துறையின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் தலைமையில் இன்று கலந்துரையாடல் நடைபெற்றது.

ஜனாதிபதி அண்மையில் பசுமை விவசாய செயற்பாட்டு மத்திய நிலையத்தை ஸ்தாபித்ததுடன், அது இராணுவத் தளபதியின் வழிகாட்டலில் இயங்குகின்றது.

விவசாய அமைச்சில் இன்று (08) நடைபெற்ற கலந்துரையாடலில் இராணுத் தளபதியுடன் துறைக்கு பொறுப்பான அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஸ ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

அரசாங்கத்தின் இரண்டு உர நிறுவனங்களினதும் தலைவர்கள், அமைச்சின் அதிகாரிகளும் இதில் பங்கேற்றிருந்தனர்.

ஒன்றிணைந்த செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்