நோர்வே தூதுவருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு

நோர்வே தூதுவருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு

நோர்வே தூதுவருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

08 Dec, 2021 | 6:20 pm

Colombo (News 1st) நோர்வேயின் இலங்கைக்கான தூதுவருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று நடைபெற்றுள்ளது.

நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் Trine Jøranli Eskedal மற்றும் துணைத் தூதுவர் ஹில்டே பேர்க் ஹான்சன் ஆகியோரை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சிலர் இன்று சந்தித்துள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மற்றும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசாமி ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் பற்றி இதன்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் உரிமை சார்ந்து தொடர்ந்து உறுதியான ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள நாடான நோர்வேயுடன் தமிழ் தரப்பின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இச்சந்திப்பு ஒரு மணி நேரம் நடைபெற்றதாக TELO விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்