நில்லம்பை நீர்த்தேக்கத்தில் காணாமற்போயிருந்த பெண்ணின் சடலம் மீட்பு

நில்லம்பை நீர்த்தேக்கத்தில் காணாமற்போயிருந்த பெண்ணின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

08 Dec, 2021 | 6:15 pm

Colombo (News 1st) பேராதனை – நில்லம்பை நீர்த்தேக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (05) குளிக்கச் சென்ற நிலையில் காணாமற்போயிருந்த 20 வயதான தாயின் சடலம் இன்று பேராதனை ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது காணாமற்போன 2 வயதான குழந்தையை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பேராதனை பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த சம்பவத்தில் காணாமற்போன 22 வயதான ஒருவரின் சடலம் கடந்த திங்கட்கிழமை மீட்கப்பட்டது.

கண்டி – பூர்ணவத்தை, மஹியாவை பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நில்லம்பை நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த இருவர் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்