ஊடகவியலாளர் ஜமால் கசோக்ஜியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரான்ஸில் கைது

ஊடகவியலாளர் ஜமால் கசோக்ஜியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரான்ஸில் கைது

ஊடகவியலாளர் ஜமால் கசோக்ஜியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரான்ஸில் கைது

எழுத்தாளர் Staff Writer

08 Dec, 2021 | 9:19 am

Colombo (News 1st) ஊடகவியலாளர் ஜமால் கசோக்ஜியின் (Jamal Khashoggi) கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாரிசிலுள்ள Charles de Gaulle விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரெஞ்ச் பொலிஸார் தெரிவித்தனர்.

ஜமால் கசோக்ஜியின் கொலை தொடர்பில் தேடப்படும் 26 குற்றவாளிகளில் குறித்த சந்தேகநபரும் அடங்குகின்றார் என நம்பப்படுவதாக சர்வதேச ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், சவுதி அரண்மனை பாதுகாவலாராக பணியாற்றியுள்ளமை தெரியவந்துள்ளது.

சவுதி அரேபிய அரசையும் அந்நாட்டு மன்னர் மற்றும் இளவரசர்களையும் கடுமையாக விமர்சித்து கட்டுரைகளை எழுதிய ஊடகவியலாளர் கசோக் ஜி, 2018 ஆம் ஆண்டில் இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் வைத்து கொலை செய்யப்பட்டிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்