இந்திய முப்படைத் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது; ஐவர் பலி

இந்திய முப்படைத் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது; ஐவர் பலி

இந்திய முப்படைத் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது; ஐவர் பலி

எழுத்தாளர் Bella Dalima

08 Dec, 2021 | 2:48 pm

Colombo (News 1st) தமிழகத்தின் குன்னூர் அருகே இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் சென்ற இராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதாகவும் இருவர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் NDTV செய்தி வௌியிட்டுள்ளது.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான Mi-17V5 ரக ஹெலிகாப்டரில் முப்படைத் தளபதி பிபின் ராவத் மற்றும் இராணுவ அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள் உட்பட 14 பேர் பயணம் மேற்கொண்டதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

தமிழகத்தின் குன்னூர்- ஊட்டி இடையே மலைப்பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது இராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது.

உடனடியாக அந்த பகுதிக்கு மீட்புப் படையினருடன் விரைந்த குன்னூர் இராணுவ முகாம் அதிகாரிகள் எரிந்த நிலையில் இரண்டு உடல்களை மீட்டுள்ளனர்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்