by Staff Writer 08-12-2021 | 7:20 AM
Colombo (News 1st) அரச மற்றும் பகுதியளவு அரச நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள், இன்று (08) சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
10,000 ரூபா சம்பள அதிகரிப்பை கோரி, கூட்டுத் தொழிற்சங்க நடவடிக்கையாக இதனை முன்னெடுத்துள்ளதாக அகில இலங்கை முகாமையாளர்கள் சங்கத்தின் தலைவர் உதெனி திசாநாயக்க தெரிவித்தார்.
இதனிடையே, சுகாதாரத் தொழிற்சங்கங்களின் சம்மேளனமும் இன்று (08) தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக அதன் இணை ஏற்பாட்டாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.