by Bella Dalima 07-12-2021 | 4:22 PM
Colombo (News 1st) திருகோணமலை - மூதூர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 20 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் M.M.A.அரூஸ் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று சபையில் சமர்ப்பித்துள்ளார்.
பிரதேச சபையின் 24 உறுப்பினர்களில் 21 உறுப்பினர்கள் மாத்திரம் இன்றைய சபை அமர்வில் கலந்துகொண்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.
இதன்போது, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 20 உறுப்பினர்கள் வாக்களித்ததுடன், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினர் A.L.M.அஹ்ஸன் மாத்திரம் எதிராக வாக்களித்துள்ளார்.
இதற்கமைய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வசமுள்ள மூதூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 20 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.