இலங்கையர் கொலை: ஜம்இய்யத்துல் உலமா கண்டனம்

பாகிஸ்தானில் இலங்கையர் கொடூரமாக கொலை செய்யப்பட்டமைக்கு ஜம்இய்யத்துல் உலமா கண்டனம்

by Bella Dalima 07-12-2021 | 5:02 PM
Colombo (News 1st) பாகிஸ்தானின் சியால்கோட்டில் இலங்கையை சேர்ந்த முகாமையாளர் ஒருவர் மனிதாபிமானமற்ற முறையில் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது. இந்த கொடூரக் கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதத்தின் பெயரால் இழைக்கப்பட்ட இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் இஸ்லாத்தின் போதனைகளுக்கு முற்றிலும் முரணானது எனவும் இந்த செயலை மன்னிக்க முடியாது எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகளாவிய அனைத்து மக்களும் சட்டத்தை மதித்து, சமூகங்களுக்கிடையில் நிலையான சகோதரத்துவத்தை கட்டியெழுப்புவதற்கு மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச்செயலாளர் அஷ்ஷேக் அர்கம் நூரமித் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.