by Staff Writer 07-12-2021 | 10:22 AM
Colombo (News 1st) பாகிஸ்தான் - சியல்கோட்டில் கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு நிதி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதனடிப்படையில், 2.5 மில்லியன் ரூபா பணத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் பணியாளராக 11 வருடங்களுக்கு மேல் இலங்கை பொருளாதாரத்திற்கு பிரியந்த குமார வழங்கிய ஒத்துழைப்பை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் - சியல்கோட்டிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் பொது முகாமையாளராக கடமையாற்றிய பிரியந்த குமார, கடந்த 03ஆம் திகதி கொலை செய்யப்பட்டார்.
நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட அன்னாரின் உடற்பாகங்கள், கனேமுல்லையிலுள்ள இல்லத்திற்கு இன்று (07) அதிகாலை கொண்டு செல்லப்பட்டன.
பிரியந்த குமாரவை கொலை செய்தமை தொடர்பில் இதுவரை நூற்றுக்கும் அதிகமான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.