அடையாள இலக்கத்துடன் தேசிய பிறப்புச் சான்றிதழ் விநியோகிக்கப்படவுள்ளது

அடையாள இலக்கத்துடன் தேசிய பிறப்புச் சான்றிதழ் விநியோகிக்கப்படவுள்ளது

அடையாள இலக்கத்துடன் தேசிய பிறப்புச் சான்றிதழ் விநியோகிக்கப்படவுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

07 Dec, 2021 | 3:13 pm

Colombo (News 1st)  இலங்கை அடையாள இலக்கத்துடன் தேசிய பிறப்புச் சான்றிதழை விநியோகிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.

தேசிய பிறப்புச் சான்றிதழை வழங்குவதனூடாக பிறப்பு முதல் இறப்பு வரையான அனைத்து நடவடிக்கைகளையும் இலகுவாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஆட்பதிவு திணைக்கத்தினூடாக இலங்கை அடையாள இலக்கத்தை பதிவாளர் நாயகம் திணைக்களத்திற்கு வழங்கி, குறித்த இலக்கத்தை உள்ளடக்கி பதிவாளர் நாயக திணைக்களத்தினூடாக பிறப்புச் சான்றிதழை விநியோகிக்க முடியும் என ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்