'வாழைத்தோட்டம் பவாஸ்' கொலை: நால்வர் கைது

by Staff Writer 06-12-2021 | 1:23 PM
Colombo (News 1st) 'வாழைத்தோட்டம் பவாஸ்' என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வாள்களுடன் 04 சந்தேகநபர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு காரொன்றில் வந்த சிலர், பவாஸைத் துரத்திச்சென்று கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளனர். 'வாழைத்தோட்டம் பவாஸ்' என்பவர் குற்றச்செயல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு சில காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டவர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்டம் பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.