மாதகல் கடற்பரப்பில் ஒரு தொகை கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது

மாதகல் கடற்பரப்பில் ஒரு தொகை கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது

மாதகல் கடற்பரப்பில் ஒரு தொகை கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2021 | 5:59 pm

Colombo (News 1st) காங்கேசன்துறை – மாதகல் கடற்பரப்பில் பெருமளவு கேரள கஞ்சா கடற்படையினரால் இன்று (06) கைப்பற்றப்பட்டுள்ளது.

மாதகல் கடலில் 275 கிலோகிராம் கேரள கஞ்சா இன்று (06) காலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கேரள கஞ்சா தொகையை கொண்டுவருவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 02 படகுகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்