சுதந்திரபுரத்தில் தங்கம் கிடைக்கவில்லை - பொலிஸார்

by Staff Writer 06-12-2021 | 9:04 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - சுதந்திரபுரத்தில் தங்கம் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இடத்தில் இன்று (06) முன்னெடுக்கப்பட்ட அகழ்வின்போது எவையும் கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் கூறினர். முல்லைத்தீவு - சுதந்திரபும் பகுதியில் போர் காலத்தில் தங்கம் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இடத்தில் இன்று மூன்றாவது நாளாகவும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த இரண்டாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போதும் எவையும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையிலேயே, முல்லைத்தீவு நீதவான் டி. சரவணராஜா முன்னிலையில் இன்று (06) மூன்றாவது நாளாக அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது. எனினும், இன்றைய தினமும் அந்த இடத்தில் எவையும் கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். எதிர்வரும் 25ஆம் திகதி மீண்டும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படவுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார்.