by Staff Writer 05-12-2021 | 3:31 PM
Colombo (News 1st) மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்துள்ளமையால், இன்று (05) மின் விநியோகம் துண்டிக்கப்படமாட்டாதென என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
மாலை 06 மணி தொடக்கம் இரவு 09.30 மணி வரையான காலப்பகுதிக்குள் நாட்டின் சில பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சு நேற்று (04) அறிவித்திருந்தது.
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகள் முழுமையாக வழமைக்கு திரும்பும் வரை சில பகுதிகளில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்சன ஜயவர்தன குறிப்பிட்டார்.