பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட இலங்கையரின் சடலம் நாளை (06) நாட்டிற்கு …

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட இலங்கையரின் சடலம் நாளை (06) நாட்டிற்கு …

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட இலங்கையரின் சடலம் நாளை (06) நாட்டிற்கு …

எழுத்தாளர் Staff Writer

05 Dec, 2021 | 3:40 pm

Colombo (News 1st) பாகிஸ்தான் – சியல்கோட்டில் சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்யப்பட்ட இலங்கை முகாமையாளர் பிரியந்த குமாரவின் சடலம் நாளை (06) நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் அன்னாரின் சடலம் கொண்டுவரப்படவுள்ளது.

அன்னாரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டுவருவது உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கான செலவை ஏற்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாகிஸ்தானுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில், பாகிஸ்தான் அரசாங்கத்தினால் முழுமையான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, தற்போது பாகிஸ்தானில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகர் மேலும் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் 400 இற்கும் அதிகமான இலங்கையர்கள் வசித்து வருவதாகவும் அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்