by Staff Writer 05-12-2021 | 2:56 PM
Colombo (News 1st) கிண்ணியா படகுப்பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்திருந்த மற்றுமொரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 41 வயதுடைய பெண்ணொருவரே நேற்றிரவு (04) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
விபத்தில் காயமடைந்த நிலையில் கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக குறித்த பெண் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த பெண் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
இதற்கமைய, கிண்ணியா படகுப்பாதை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 08 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் 23 ஆம் திகதி திருகோணமலை, கிண்ணியா - குறிஞ்சாக்கேணியில் படகுப்பாதை கவிழ்ந்ததில் மாணவர்கள் உள்ளிட்ட 06 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 06 வயது சிறுமி கடந்த 28 ஆம் திகதி உயிரிழந்தார்.