by Staff Writer 04-12-2021 | 4:29 PM
Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட சன்ஷைன் சுத்தா என்றழைக்கப்பட்ட நபரை சுட்டுக்கொல்வதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் T-56 ரக துப்பாக்கியும் 19 தோட்டாக்களும் மாத்தறை ஹேனவல பகுதியிலுள்ள பாழடைந்த இடமொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தின் வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட டிங்கர் லசந்த என்பரால் குறித்த ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மாத்தறை வரக்காபிட்டிய பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி சன்ஷைன் சுத்தா சுட்டுக்கொல்லப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட டிங்கர் லசந்த என்பவரை, ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை அடையாளம் காட்ட அழைத்துச் சென்றிருந்த போது, பொலிஸாருடன் மேற்கொள்ளப்பட்ட பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில் அவரும் உயிரிழந்தார்.