மனுஷ நாணயக்காரவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி சபாநாயகரிடம் கடிதம் கையளிப்பு

மனுஷ நாணயக்காரவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி சபாநாயகரிடம் கடிதம் கையளிப்பு

மனுஷ நாணயக்காரவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி சபாநாயகரிடம் கடிதம் கையளிப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Dec, 2021 | 10:33 pm

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவிற்கு எதிராக அதிகபட்ச ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கோரி 38 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

நேற்று (03) பிற்பகல் பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார, சபைக்கு தலைமை தாங்கியவரின் உத்தரவை பின்பற்றாது அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக தெரிவித்து இந்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணை நடத்தி, இவ்வாறான விடயம் எதிர்காலத்தில் ஏற்படாதிருக்க நடவடிக்கை எடுக்குமாறு கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்