இன்றும் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவு

இன்றும் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவு

இன்றும் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவு

எழுத்தாளர் Staff Writer

04 Dec, 2021 | 2:21 pm

Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் இன்றும் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

யாழ்ப்பாணம் – அரியாலை, திருநெல்வேலி, காத்தான்குடி, ருவன்வெல்ல, தெஹியத்தகண்டிய, எஹலியகொட மற்றும் அம்பலாங்கொட உள்ளிட்ட பகுதிகளில் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதனிடையே, எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கின்றமையுடன் தொடர்புடைய பொலிஸ் விசாரணை அறிக்கையை, அது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்கு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை இடைநிறுத்துமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தொழிற்சாலைகள் மற்றும் தகனசாலைகளுக்கு தேவையான எரிவாயுவை விநியோகிக்க நுகர்வோர் விவகார அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்