இந்தோனேஷியாவின் செமெரு எரிமலை வெடித்து சாம்பலை உமிழ்கிறது

இந்தோனேஷியாவின் செமெரு எரிமலை வெடித்து சாம்பலை உமிழ்கிறது

இந்தோனேஷியாவின் செமெரு எரிமலை வெடித்து சாம்பலை உமிழ்கிறது

எழுத்தாளர் Bella Dalima

04 Dec, 2021 | 6:13 pm

Colombo (News 1st) இந்தோனேஷியா – ஜாவா தீவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள செமெரு (Semeru)எரிமலை வெடித்துள்ளது.

எரிமலையில் இருந்து பெருமளவு புகை வௌியேறுவதுடன், அருகிலுள்ள கிராமங்களில் புகைமண்டலம் சூழ்ந்துள்ளது.

புகை 15,000 மீட்டருக்கு மேல் நோக்கி பரவக்கூடும் என்பதால், விமான சேவைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செமெரு மலையை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்கள், சாம்பலும் புகையும் சூழ்ந்துள்ள பகுதியிலிருந்து வௌியேறி வரும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன.

எரிமலை வெடிப்பினால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை.

கடல் மட்டத்தில் இருந்து 3,676 மீட்டர் உயரத்திலுள்ள செமெரு எரிமலை கடந்த ஜனவரி மாதத்திலும் வெடித்துச் சிதறியது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்