IMF துணை நிர்வாக இயக்குநராக கீதா கோபிநாத் நியமனம்

IMF துணை நிர்வாக இயக்குநராக கீதா கோபிநாத் நியமனம்

by Bella Dalima 03-12-2021 | 5:29 PM
Colombo (News 1st) சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund - IMF)துணை நிர்வாக இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டு வரும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளியல் வல்லுநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதா கோபிநாத் செயற்பட்டு வருகிறார். இந்நிலையில், கேரளாவை சேர்ந்த அமெரிக்கவாழ் இந்தியரான கீதா கோபிநாத் சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். துணை நிர்வாக இயக்குனரின் பதவிகாலம் அடுத்த ஆண்டு முடிவடைய உள்ளதைத் தொடர்ந்து, அந்த பதவிக்கு கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் துணை நிர்வாக இயக்குநர் ஆகிய இரு உயர் பதவிகளிலும் பெண்கள் பணியாற்றுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.