மேற்கிந்தியத் தீவுகளை 2-0 என வென்றது இலங்கை

மேற்கிந்தியத் தீவுகளை 2-0 என வென்றது இலங்கை

மேற்கிந்தியத் தீவுகளை 2-0 என வென்றது இலங்கை

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2021 | 5:41 pm

Colombo (News 1st) மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 164 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

09 விக்கெட்களை இழந்து 345 ஓட்டங்களை பெற்றிருந்த போது இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.

297 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 132 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

15 ஓட்டங்கள் பெறப்பட்ட வேளை, அணியின் முதலாவது விக்கெட் வீழ்த்தப்பட்டதுடன் அணித்தலைவர் கிரெய்க் பிரெத்வெய்ட் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

நுக்ரும்பா போனர் அதிகபட்சமாக 44 ஓட்டங்களைப் பெற்று வௌியேறினார்.

பந்துவீச்சில் லசித் எம்புல்தெனிய மற்றும் ரமேஷ் மென்டிஸ் ஆகியோர் தலா 5 விக்கெட்களை வீழ்த்தினர்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி 132 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக திமுத் கருணாரத்ன தெரிவானார்.

முதலாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி 187 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இதற்கமைய இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என கைப்பற்றியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்