கூட்டமைப்பு மற்றும்  தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையில் இருந்து வௌிநடப்பு

by Staff Writer 03-12-2021 | 8:19 PM
Colombo (News 1st) இன்றைய (03) குழுநிலை விவாதத்தின் போது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு அமைச்சிற்கான நிதி ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் உறுப்பினர்கள் சபையில் இருந்து வௌிநடப்பு செய்தனர். பாதுகாப்பு அமைச்சிற்கான நிதி ஒதுக்கீட்டிற்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் வாக்கெடுப்பை நடத்துமாறு சபையில் கோரினர். எனினும், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படாமையினால் அதற்கு சந்தர்ப்பம் இல்லையென சபாநாயகர் சுட்டிக்காட்டினார். எனினும், அவர்களின் அந்த ஆட்சேபனை பதிவு செய்யப்படும் எனவும் சபாநாயகர் தெரிவித்தார். எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வாக்கெடுப்பை கோரினால் அதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் சபையில் சுட்டிக்காட்டினார். அதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டாமையினால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையில் இருந்து வௌிநடப்பு செய்தனர்.

ஏனைய செய்திகள்