கனேடிய உயர்ஸ்தானிகருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு

கனேடிய உயர்ஸ்தானிகருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு

by Staff Writer 03-12-2021 | 6:56 PM
Colombo (News 1st) கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினனுக்கும் (David McKinnon)தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் கொழும்பிலுள்ள உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (03) முற்பகல் சந்திப்பொன்று நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம், எஸ். நோகராதலிங்கம் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டிருந்தனர். தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைகள், எதிர்கால நடவடிக்கைகள் பற்றி விளக்கமளிக்கப்பட்டதாக TELO-வின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46/1 பிரேரணைக்கு பிரதான பங்கு வகித்த கனடாவுடனான தமிழ் தரப்பின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக இது அமைந்ததாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.