பாடசாலை விடுமுறை நீடிப்பு 

பாடசாலை விடுமுறை நீடிப்பு 

by Staff Writer 03-12-2021 | 4:05 PM
Colombo (News 1st) நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 23 ஆம் திகதியும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் பாடசாலை விடுமுறைகள் 2022 ஜனவரி 2 ஆம் திகதி வரை தொடரும் என இலங்கையின் கல்வி அமைச்சு வெள்ளிக்கிழமை (3) தெரிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் ஜனவரி மாதம் 03 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனூடாக, ஏற்கனவே எதிர்வரும் 23 தொடக்கம் 27 ஆம் திகதி வரை மாத்திரம் விடுமுறை வழங்கப்படும் என வௌியிடப்பட்ட அறிவிப்பு திருத்தப்படுவதாக கல்வி அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.