சந்தைக்கு எரிவாயு விநியோகிக்கும் செயற்பாடு இடைநிறுத்தம்

சந்தைக்கு எரிவாயு விநியோகிக்கும் செயற்பாடு இடைநிறுத்தம்

சந்தைக்கு எரிவாயு விநியோகிக்கும் செயற்பாடு இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2021 | 2:36 pm

Colombo (News 1st) சந்தைக்கு எரிவாயு விநியோகம் மேற்கொள்ளும் செயற்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை, சந்தைக்கு எரிவாயு விநியோகிக்கப்பட மாட்டாதென நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

இதனிடையே, எரிவாயு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய பொலிஸ் விசாரணைகள் ஊடாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு கூறியுள்ளது.

இதற்காக, இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் நிறைவு செய்யப்பட்ட அறிக்கைகள் அமைச்சினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் K.D.S. ருவன் சந்திர தெரிவித்தார்.

இதனிடையே, பொலன்னறுவை மற்றும் பன்னல ஆகிய பகுதிகளில் 02 வீடுகளில் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இவை நேற்று (02) பிற்பகல் பதிவானதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்