உர நிறுவனங்களை இணைத்து இராணுவத் தளபதியின் கீழ் புதிய நிறுவனம் ஸ்தாபிப்பு

உர நிறுவனங்களை இணைத்து இராணுவத் தளபதியின் கீழ் புதிய நிறுவனம் ஸ்தாபிப்பு

உர நிறுவனங்களை இணைத்து இராணுவத் தளபதியின் கீழ் புதிய நிறுவனம் ஸ்தாபிப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2021 | 9:00 pm

Colombo (News 1st) இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் வழிநடத்தலின் கீழ் பசுமை விவசாய மத்திய நிலையத்தை உருவாக்குவதற்கு ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார்.

அரசாங்கத்தின் உர நிறுவனங்களை ஒன்றிணைத்து தேசிய சேதனப் பசளை விநியோக நிறுவனமாக செயற்படுத்தும் பொருட்டு இந்த நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

கனமான மற்றும் திரவ சேதன உர தயாரிப்புகளை அவற்றின் தரத்திற்கு அமைய ஊக்குவிப்பதும், விவசாயிகளுக்கு இலவசமாக உரத்தை பெற்றுக்கொடுப்பதும் இராணுவத்தளபதியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மத்திய நிலையத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்