2021 வாக்காளர் இடாப்பு திருத்தம் தொடர்பில் 30,000 ஆட்சேபனைகள்

2021 வாக்காளர் இடாப்பு திருத்தம் தொடர்பில் 30,000 ஆட்சேபனைகள்

2021 வாக்காளர் இடாப்பு திருத்தம் தொடர்பில் 30,000 ஆட்சேபனைகள்

எழுத்தாளர் Staff Writer

02 Dec, 2021 | 7:16 am

Colombo (News 1st) 2021 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு திருத்தம் தொடர்பில் 30,000 இற்கும் மேற்பட்ட ஆட்சேபனைகளும் உரிமைகோரல்களும் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கிடைத்துள்ள மேன்முறையீடுகள் தற்போது பரிசீலிக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டார்.

மாவட்ட உதவி மற்றும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர்களின் கண்காணிப்பின் கீழ் இதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு எதிர்வரும் 31 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்