இந்திய உயர்மட்ட அரசியல்வாதிகளை சந்தித்தார் பசில்

இந்திய உயர்மட்ட அரசியல்வாதிகளை சந்தித்தார் பசில் ராஜபக்ஸ

by Staff Writer 02-12-2021 | 8:34 PM
Colombo (News 1st) இந்தியாவிற்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ இன்றும் உயர்மட்ட அரசியல்வாதிகள் பலரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்றும் இந்திய நிதியமைச்சர் கலாநிதி நிர்மலா சீதாராமனை அவர் சந்தித்துள்ளதுடன், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்ஷங்கரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று பிற்பகல் இந்திய தேசிய பாதுகாப்பு ஆ​லோசகர் அஜித் தோவாலையும் இந்திய பெட்ரோலிய வளத்துறை அமைச்சரையும் அமைச்சர் பசில் ராஜபக்ஸ சந்தித்துள்ளார். இதேவேளை, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ நேற்றைய தினமும் இந்திய நிதியமைச்சரை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியையும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இன்று சந்தித்தார். மத்திய பெட்ரோலிய அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொடவும் கலந்துகொண்டிருந்தார்.