ஹட்டனில் மீன்பிடி பூனையின் உடல் மீட்பு 

ஹட்டனில் மீன்பிடி பூனையின் உடல் மீட்பு 

ஹட்டனில் மீன்பிடி பூனையின் உடல் மீட்பு 

எழுத்தாளர் Staff Writer

02 Dec, 2021 | 12:58 pm

Colombo (News 1st) ஹட்டன் – ​நோர்வூட், பிலிங்பொனி தேயிலைத் தோட்டமொன்றை அண்டிய காட்டிலிருந்து இறந்த நிலையில் மீன்பிடிப் பூனையொன்றின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து மீன்பிடிப் பூனையின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

இறந்த மீன்பிடிப் பூனை 6 வயது மதிக்கத்தக்கதென வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நல்லதண்ணி வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் உடற்கூற்று பரிசோதனைக்காக மீன்பிடிப் பூனையின் உடல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்