மின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு

மின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

02 Dec, 2021 | 7:20 am

Colombo (News 1st) புத்தளம் – கல்லடி பகுதியில் மின்சார வேலியில் சிக்கி யானை ஒன்று உயிரிழந்துள்ளது.

மின்சார வேலியில் சிக்கிய குறித்த யானை 03 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

புத்தளம் – கல்லடி, சிங்ஹபுர பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கியே குறித்த யானை உயிரிழந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்