English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
02 Dec, 2021 | 7:20 pm
Colombo (News 1st) அரசியல் எதிர்காலத்தை அடகு வைத்து கடினமான தீர்மானங்களை எடுக்கும் யுகத்தை அரசாங்கம் எதிர்கொண்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
அலரி மாளிகையில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கு எசிதிசி காப்புறுதி பத்திரத்தை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே பிரதமர் இதனை கூறினார்.
காப்புறுதியை பெறும் ஐந்து ஊடகவியலாளர்களுக்கு பிரதமரால் இதன்போது காப்புறுதி பத்திரங்கள் வழங்கப்பட்டன.
எசிதிசி காப்புறுதி திட்டத்தில் சுமார் 3000 ஊடகவியலாளர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் கருத்து வௌியிட்ட பிரதமர்,
ஊடகங்களால் அரசாங்கமொன்றை உருவாக்க முடியும். எனினும், அரசாங்கத்தை பாதுகாக்க முடியாது என குறிப்பிட்டார்.
அரசாங்கத்தில் உள்ளவர்களால் அரசாங்கத்தை பாதுகாக்க முடியுமே தவிர, ஊடகங்கள் அரசாங்கத்தை பாதுகாக்க முயன்றால், தற்போது வழங்குவதை விட பெரிய காப்புறுதியை வழங்க வேண்டியேற்படும் என பிரதமர் சுட்டிக்காட்டினார்.
பிரபல்யமான தீர்மானங்களை எடுப்பதற்கு பதிலாக கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய காலத்தையே தமது அரசாங்கம் எதிர்கொண்டுள்ளதாகவும், அவ்வாறான கடினமான தீர்மானங்களை எடுப்பதற்கும் தாய் தயாராக இருப்பதாகவும் பிரதமர் கூறினார்.
10 Jul, 2022 | 02:55 PM
07 Jul, 2022 | 05:27 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS